திருத்தணி, பிப். 07 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …

மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட ம், திருத்தணி  ஜிஆர்.டி கல்லூரி   கூட்ட அரங்கில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபு சங்கர்,   தலைமையில் 2500 பயனாளிகளுக்கு‌ இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு 2500 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா  வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார். அமைச்சர் காந்தி கூறுகையில் முதல் முறையாக இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்ததாகவும், அதன் தொடர்ச்சியாக இன்றைய தமிழக முதல்வர்‌‌ ஸ்டாலின் பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாவை வழங்கி வருவதாகவும் தெரிவித்த அவர், மேலும் திமுக ஆட்சியை தவிர எந்த ஆட்சியிலும் ஏழைகளுக்கு தொடர்ந்து இது போன்ற பல்வேறு சலுகை‌ திட்டங்களை வழங்கவில்லையென அப்போது அமைச்சர் தெரிவித்தார்,

வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற அந்நிகழ்வில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார்,  மாவட்ட  ஊராட்சி குழு  தலைவர்   கே.வி.ஜி. உமா மகேஸ்வரி, திருத்தணி வருவாய்  கோட்டாச்சியர்  தீபா  மற்றும்   அரசு துறை அலுவலர்கள்  வட்டாட்சியர்கள் என திரளானவர்கள் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here