திருவாரூர், பிப். 07 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …

பழைய மோட்டார் சட்டத்தை திருத்திமைத்து, மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள புதிய பாரதிய நியாய சங்கீதா என்ற சட்டம் என்பது, வாகன ஓட்டுனரை கொலை குற்றவாளியாக மாற்றத் துடிப்பதாக குற்றாச்சாட்டினை எழுப்பி மத்திய மோடி அரசை கண்டித்து திருவாரூரில் சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பழைய மோட்டார் சட்டத்தை திருத்திமைத்து, மத்திய அரசுக்கொண்டு வந்துள்ள புதிய நியாய சங்கீதா சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

மேலும் அப்புதிய போக்குவரத்துச் சட்டத்தின் மூலம் ஓட்டுநர்களை கொலை குற்றவாளியாக மோடி தலைமையிலான மத்திய அரசு மாற்றத் துடிப்பதாக குற்றச்சாட்டுகளை எழுப்புகின்றனர்.

மேலும் அச்சட்டத்தின்வாயிலாக இரண்டு சக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்களை இயக்கும் ஓட்டுனரை கொலை குற்றவாளியாக்கும் கொடூர சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், கார்ப்பரேட்களுக்கு முன்னுரிமை தந்து மோட்டார் தொழிலையே அழிவு பாதைக்கு தள்ளுவதை கண்டித்தும், காலாவதியான டோல்கேட்டுகளை உடனே மூட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டத் தலைவர் கே ஜி ஆர் காதர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு மத்திய அரசைக் கண்டித்தும், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here