திருப்பூர். சனவரி. 27 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஹரிகிருஷ்ணன்…

திருப்பூர் மாவட்டம், உடுமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குடிமங்கலம் மேற்கு ஒன்றியம் பெதப்பம்பட்டியில் அ.இ.அ.தி.மு.க திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட  மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மேலும் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளரும், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான உடுமலை சட்டமன்ற உறுப்பினர்  கே.ராதாகிருஷ்ணன் பி.காம் ,MLA வீர எழுச்சிவுரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து அவர் உரை நிகழ்த்தையில், முந்தைய அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு கொண்டு வந்த நல திட்டங்களை, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்திவிட்டதெனவும், மேலும் பல நலத்திட்டங்களை வழங்குவேன் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றிய மக்கள் விரோத ஆட்சிதான் தற்போது தமிழ்நாட்டில் நடந்து வருகிறது என அப்போது திமுக அரசு மீது குற்றம் சாட்டினார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில்  40 தொகுதிகளிலும், மாண்புமிகு  தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக  பொதுச் செயலாளருமான  டாக்டர் எடப்பாடியார்  தலைமையில்  வென்றெடுத்து மக்கள் விரோத திமுக விரட்டியடிப்போம் என சூளுரைத்தார்.

அச்சிறப்பு மிகு கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஒன்றிய நகர பேரூராட்சி ஊராட்சி உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் சார்பு அணிகளை சார்ந்த நிர்வாகிகள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர்கள் உறுப்பினர்கள் மற்றும் அக்கட்சியின் தொண்டர்கள் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here