சோழவரம், ஜன. 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி ….
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்தில் அடங்கிய வெள்ளிவாயல் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது.
முகாமில் நகர்புற மற்றும் ஊரக வளர்ச்சி துறை,வருவாய் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட 13 துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் முகாமிட்டு பொதுமக்கள் அளித்த மனுக்களுக்கு உடனடி தீர்வு காணும் பொருட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்த முகாமிற்கு வெள்ளி வாயல் ஊராட்சி மன்ற தலைவர் சதா தலைமை தாங்கினார்.சோழவரம் வட்டார சுகாதார மையத்தின் சார்பில் மருத்துவ முகாமும் நடைபெற்றது. சோழவரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் ராசாத்தி செல்வ சேகரன் குத்து விளக்கு ஏற்றி முகாமினை துவக்கி வைத்தார்.
இதில் பொன்னேரி தனி வட்டாட்சியர் மோகனரங்கன், சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் சகிலா சகாதேவன், துனைதலைவர் வடிவேல்,வருவாய் ஆய்வாளர்கள் அருணாச்சலம்,கிராம நிர்வாக அலுவலர் ஜெயலட்சுமி, சார் ஆய்வாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர், மேலும் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உடனடி தீர்வு கண்டு சான்றுகள் வழங்கப்பட்டன வெள்ளி வாயில் ஊராட்சிக்குட்பட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.






















