நன்னிலம், ஜன. 01 –
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேவுள்ள நீலக்குடி தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அனைத்திந்திய தென்மண்டல பெண்களுக்கான கோகோ போட்டிகள் நிறைவு விழா நடைப்பெற்றது.
அனைத்திந்திய பெண் மண்டல பெண்களுக்கான கோகோ போட்டிகள் கடந்த 26- ஆம் தேதி துவங்கி ஐந்து நாட்கள் நடைப்பெற்ற அப்போட்டி டிசம்பர் 30 இல் நிறைவுற்றது.. அதில் 62 பல்கலைக்கழகத்தில் இருந்து சுமார் 930 விளையாட்டு வீராங்கனைகள் பங்கேற்றனர். ஐந்து நாள் நடைபெற்ற இந்த கொக்கோ போட்டிகளில், கர்நாடகத்தைச் சேர்ந்த மைசூர் பல்கலைக்கழகம் , கேரளாவைச் சேர்ந்த காலிகட் கலை கழகம் மற்றும் கேரளா பல்கலைக்கழகம், அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரதியார் பல்கலைக்கழகம் என நான்கு அணிகளும் ‘லீக்’ சுற்றுக்கு தேர்ச்சி பெற்றன.
அதில் மதிப்பெண் அடிப்படையில் கர்நாடகத்தைச் சேர்ந்த மைசூர் பல்கலைக்கழகம் முதலிடம் வென்றது.. அதனைத் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் காலிகட் பல்கலைக்கழகம் வெற்றி பெற்றது. லீக் சுற்றில் முன்னேறிய நான்கு அணிகளுமே அனைத்திந்திய மகளிர் கொக்கோ போட்டிகளில் விளையாட தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மு. கிருஷ்ணன், அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜி. ரவி, மற்றும் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் ஆர். திருமலைச்சாமி ஆகியோர் கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
ஐந்து நாள் நடைபெற்ற கொக்கோ போட்டிகளில் மூன்று நாள் வெளி மைதானத்திலும், கடைசி இரண்டு நாள் குறிப்பாக லீக் சுற்றுகள் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட உள்ளரங்கில் நடைபெற்றது. உள்ளரங்கில் அனைத்திந்திய தென் மண்டல கோகோ போட்டிகள் நடப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கே. நாகராஜன் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்டம்




















