மீஞ்சூர், டிச. 10 –
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரிலும், இணை ஆணையர் பாலகிருஷ்ணன், மற்றும் உதவி ஆணையர் ராஜாராபர்ட் மேற்பார்வையிலும், மீஞ்சூர் காவல் நிலைய சட்ட ஒழுங்கு ஆய்வாளர் காளி ராஜ் தலைமையிலும், உதவி ஆய்வாளர் கார்த்திக் முன்னிலையிலும், மீஞ்சூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அத்திப்பட்டு ,நந்தியம்பாக்கம், கல்பாக்கம், வன்னிப்பாக்கம் ஆகிய 4 ஊராட்சிகளில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட 150 க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி, பால், ரொட்டி ,பெட்ஷீட் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய வெள்ள நிவாரண தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற 150 க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வெள்ள நிவராண தொகுப்புகளை பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் பிரியங்கா துரைராஜ், துணைத்தலைவர் பொன்னி முத்துக்குமரன், சமூக ஆர்வலர்கள் பாலச்சந்தர் ,சுமதி ,மீஞ்சூர் காவல் நிலைய காவலர்கள் பாண்டி, வேல்முருகன், ஈஸ்வரன் ,பிரபு, ரஞ்சித் குமார் ,அருண்குமார், பொன்னுவேல் மற்றும் பழங்குடியின சங்க நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.






















