திருவாரூர், ஆக. 26 –
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் 24 மணி நேர காத்திருப்பு போராட்டம் நேற்று தொடங்கியது.
திமுக வின் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி எண் 309 படி CPS திட்டத்தை முழுமையாக ரத்து செய்திடக் கோரியும், CPS திட்டத்தில் ஓய்வு பெற்ற மற்றும் இறந்த ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்க கோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 24 மணி நேர காத்திருப்பு போராட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் வி. பாண்டியன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காத்திருப்பு போராட்த்தினை நேற்று தொடங்கினார்கள்.
இந்த காத்திருப்பு போராட்டத்தில் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் மோகன்தாஸ், மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அன்பரசு செல்வராஜ் உள்ளிட்ட CPS ஒழிப்பு இயக்க நிர்வாகிகள் மற்றும் அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்