எல்லாபுரம், ஆக. 15 –

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட திருக்கண்டலம் ஊராட்சி அரசு பள்ளியில்  6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை மாணாக்கர்கள் கல்விப்பயின்று வருகின்றனர்.

மேலும் அப்பள்ளியைச் சுற்றியுள்ள பூரிவாக்கம், தண்டு மேடு, நெய்வேலி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்து 480 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வந்து கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று இந்திய திருநாட்டின் 77.ஆவது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, அப்பள்ளியில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கடந்த கல்வியாண்டில் நடைப்பெற்ற 10.ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு தங்க காசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பள்ளி அளவில் முதலிடம் பிடத்த திருக்கண்டலம் கிராமத்தைச் சார்ந்த ஹேமஜோதி ( 461 மதிப்பெண்கள் ) இரண்டாம் இடம் பிடித்த பூரிவாக்கம் கிராமத்தை சேர்ந்த பிரியங்கா ( 459 மதிப்பெண்கள் ) மூன்றாம் இடம் பிடித்த திருக்கண்டலம் ஊராட்சி மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சத்தியவாணி ( 455 மதிப்பெண்கள் ) பள்ளி அளவில் அம் மூன்று இடங்களை பிடித்த அம் மாணவிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் மதன் சத்யராஜ் ஏற்பாட்டில் அவரது சொந்த நிதியில் இருந்து தங்க காசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டி.கே. ராமச்சந்திரன்,ஒன்றிய குழு உறுப்பினர் ரவி, ஆகியோர் முன்னிலையில், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஷாமிலி தேசியக் கொடியை ஏற்றினார்.

சிறப்பு மிகு இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆ.சத்திய வேலு மாணவ மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியளவில் முதல் மூன்றுயிடங்களை பிடித்த ஹேமஜோதிக்கு 4.கிராம் தங்கம் காசும், இரண்டாம் இடம் பிடித்த பிரியங்காவிற்கு 2.கிராம் தங்க காசும், 3.ஆம் இடம் பிடித்த மாணவி சத்தியவாணிக்கு 1.கிராம் காசை வழங்கி அவர்களுக்கு பாரட்டுதெரிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஸ்ரீமதி, ஆசிரியர்கள் மணி, ரோசா, வாசுகி, கோமதி, நதியா மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here