பொன்னேரி, ஆக. 09 –

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணியம் சுவாமி திருக்கோவில், ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பெரும்பேடு பாலகுமார சுவாமி திருக்கோவில் ஆகிய இம்மூன்று திருக்கோயில்களிலும் ஆடி கிருத்திகையை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

முன்தாக அதிகாலை 4 மணிக்கே அத்திருக்கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். மூலவருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடைபெற்றது. மூலவர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அதனைக் காண ஏராளமான பொதுமக்கள் பால்குடம் சுமந்து, பால்காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி எடுத்துக்கொண்டும். பக்தி பரவசத்துடன் கோஷங்கள் எழுப்பியப்படி, முக்கிய வீதிகளின் வழியாக கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாட்டில் கலந்துக்கொண்டனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர்கள் செந்தில்குமார், மாதவன்,மற்றும் பெரும்பேடு கிராமநிர்வாகி ஜோதி உள்ளிட்ட ஊழியர்கள் செய்து இருந்தனர். கடந்த ஆண்டை விட இந்த வருடம் அதிகப்படியான பக்தர்களால் கோவில்களில் வளாகம் முழுவதும் நிரம்பி காணப்பட்டது அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here