திருவாரூர், ஆக. 07 –
திருவாரூரில் மறைந்த முன்னாள் தமிழக மிதலமைச்சரும், திமுக தலைவர் கலைஞரின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருவாரூரில் உள்ள அவரது இல்லம் மற்றும் கலைஞர் கோட்டத்தில் உள்ள கலைஞர் திருவுருவச்சிலையும், வண்ண மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் மிக அருமையாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வரும் மறைந்த திமுக தலைவருமான கலைஞரின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு இன்று திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள கலைஞர் இல்லம் முன்பு முத்தமிழறிஞர் கலைஞரின் ஆளுயர திருவுருவ படத்திற்கு வண்ண மின் விளக்குகளாலும் மலர்களாலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
அதனை காணும் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் கலைஞரை நேரில் பார்ப்பது போல இருப்பதாய் தெரிவித்தும், மேலும் சில நிமிடங்கள் அமைதியாக அங்கேயே நின்று அவரது திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். மேலும் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்லும் பொதுமக்களும் அருமையாக அலங்கரிக்கப்பட்ட கலைஞர் இல்லம் முன்பு தொடர்ந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அதுப்போன்று சில நாட்களுக்கு முன் தமிழக முதல்வர் திறந்து வைத்த காட்டூர் கலைஞர் கோட்டத்தில் உள்ள கலைஞர் திருவுருவ சிலை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் திமுக கட்சியின் கொடியின் வண்ணமான, கருப்பு சிவப்பு வண்ணத்தில், பலூன்களால் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
























