கும்பகோணம், ஆக. 04 –
கும்பகோணம் பாஸ்கர சேஷ்திரம் மற்றும் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஓருமுறை நடைபெறும் உலக பிரசித்தி பெற்ற மகாமக பெருவிழா காணும் மாநகரமாகும்.
மேலும் பல்வேறு பெருமைகளை தன்னகத்தே கொண்ட கும்பகோணத்தில், மகாமகம் பெருவிழா தொடர்புடைய பனிரெண்டு சிவாலயங்களில் முதன்மையான ஸ்தலமாக விளங்குவது மங்களாம்பிகா சமேத ஆதி கும்பேஸ்வரசுவாமி திருக்கோயிலாகும்.
மேலும் இத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் ஆடி 3 வது வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கமாகும். அதுபோன்றே இவ்வாண்டும் இத்திருக்கோயிலில் சர்வதேச அளவில் நிலுவும் அனைத்து பிரச்சினைகளும் தீரவும், உலக மக்கள் செழிப்புடன் இருக்க வேண்டியும், அமைதி, உயர்ந்த ஞானம், உயர்ந்த அறிவு, மகிழ்ச்சி என அனைவருக்கும் கிடைத்திட வேண்டி இன்று இத்திருக்கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பூஜையில் ஈடுபட்டனர்.