திருவாரூர், ஆக. 01 –
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைத்ததில், திருத்துறைப்பூண்டி ஒன்றிய குழு பொது நிதியில் பெரும் முறைகேடு நடைபெற்று இருப்பதாக குற்றம் சாட்டி, திருத்துறைப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடக்க வேண்டும் என திருத்துறைப்பூண்டி பத்தாவது வார்டு ஒன்றிய திமுக கவுன்சிலர் சுரேஷ் (எ)பாலாஜி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
மேலும் புகார் மனுக்குறித்து, அவர் தெரிவிக்கும் போது, திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில், ஒன்றிய குழு பொது நிதியிலிருந்து வார்டுகளுக்கு தலா இரண்டு உயர் கோபுர மின் விளக்குகள் விகிதத்தில் 35 விளக்குகளுக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்றது.
இந்நிலையில், ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் எவ்வித அறிவிப்பும் இல்லாமல் கூடுதலாக 40 உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது எனவும், இவ்விளக்குகள் அமைப்பதில் ஒரு கோடியே 40 லட்சத்திற்கும் மேலாக கையாடல் செய்யப்பட்டுள்ளது எனவும், திருத்துறைப்பூண்டி ஒன்றிய பத்தாவது வார்டு திமுக ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் பாலாஜி தெரிவிக்கின்றார்.
மேலும் இதுக்குறித்து, தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு முறை திருத்துறைப்பூண்டி ஒன்றிய தலைவர் பாஸ்கரிடமும், திருத்துறைப்பூண்டி ஒன்றிய அலுவலக அரசு அதிகாரிகளிடமும், திருத்துறைப்பூண்டி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் விளக்கம் கேட்ட நிலையில், அதற்கான எவ்வித முறையான பதிலை திருத்துறைப்பூண்டி ஒன்றிய தலைவர் பாஸ்கர் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் திருத்துறைப்பூண்டி ஒன்றிய அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவிக்கவில்லை என மேலும் அப்போது அவர் தெரிவித்தார்.
அதனால் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் முறைகேடுகள் குறித்து புகார் மனுவினை வழங்கினேன் எனவும் மேலும் அப்பகுகார் மனு மீது மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை மேற்கொண்டு, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தொடர்ந்து, திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் திருத்துறைப்பூண்டி ஒன்றிய குழு பொது நிதியிலிருந்து கோபுர மின்விளக்குகள் அமைத்தது குறித்த தரவுகளை திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் கவுன்சிலர் என்ற முறையில் எனக்கு வழங்கிட வேண்டும் எனவும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஶ்ரீயிடம் வழங்கிவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பேட்டி: சுரேஷ் (எ) பாலாஜி (திமுக ஒன்றிய குழு உறுப்பினர் )





















