பொன்னேரி, ஜூன். 27 –
தமிழ்நாடு முழுவதும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை 2023க்கான விளையாட்டுப் போட்டிகள் நடைப்பெற்று வந்த நிலையில் அதில் தேர்வான அணிகள் எதிர்வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை சென்னையில் 17 இடங்களில் முதலமைச்சர் கோப்பை – 2023 க்கான மாநில அளவில் விளையாட்டுப்போட்டகள் நடைப்பெறுகிறது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் அளவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைப்பெற்றது.
இதில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் பொன்னேரி வருவாய்த் துறையினர் அணி வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து, இன்று வெற்றி பெற்ற அணியினர் அனைவருக்கும் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார் வெற்றி பெற்ற கைப்பந்து விளையாட்டு அணியின் வீரர்கள் அனைவருக்கும் மெடல் அணிவித்து, அவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
மேலும் இவ்விழாவில் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்.






















