கும்பகோணம், ஜூன். 19 –
கும்பகோணம் அருகாமையில் உள்ள கொரநாட்டு கருப்பூர் நத்தம் கிராமத்தின் சாலை மிகவும் சிதிலமடைந்தும் குறுகலாகவும் உள்ளதாகவும், மேலும் அச்சாலையினை உடனடியாக சீர்செய்து தரும்படி அக்கிராமத்து மக்கள் அப்பிரச்சினைத் தொடர்பாக, பலமுறை அவ்வூராட்சி மற்றும் துறைச்சார்ந்த அலுவலகங்களில் புகார் அளித்தும், தொடர்ந்து பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என அவ்வூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் நத்தம் வாய்க்காலை தூர் வாரும் போது, தூர் வாரிய மண்ணை சாலையில் மேல் கொட்டியுள்ளதால் இரு தினங்களாக செய்த சாரல் மழையில் சாலையில் கொட்டப்பட்ட மண் சாலை சேரும் சகதியமாக உள்ளது. எனவும், அதனால் அச்சாலை குறுகிய நிலையில் உள்ளதால், அவ்வழியாக செல்லும் பள்ளி மாணவ மாணவிகளும் பொதுமக்களும் விவசாயிகளும் பலர் வழுக்கி விழுந்து உடல் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும், அவ்வூர் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் அதனைத்தொடரந்து இன்று பள்ளிக் குழந்தைகளை ஏற்றி சென்ற ஆட்டோ சாலையில் வழுக்கி வாய்க்காலில் கவிழ்ந்து விடும் நிலை ஏற்பட்டதாகவும், அதனால் அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆத்திரமடைந்து சென்னை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
இச்சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து உடனடியாக இந்த சாலையை அகல படுத்த வேண்டும் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை முழக்கங்களை எழுப்பினார்கள்.





















