திருவாரூர், மே. 30 –

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கள்ளச்சாராயம், கஞ்சா முதலான பொதை பொருட்கள் விற்பனை தடையின்றி நடை பெற்று வந்தது.

இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து மரக்காணத்தில் 23 பேர் உயிரிழந்த நிலையில், திருவாரூர் மாவட்ட காவல்துறை விழித்துக் கொண்டு கள்ளச்சாராயம் விற்று வருபவர்களை கைது செய்து வருகிறது.

மேலும், திருவாரூர் மாவட்ட SP உத்தரவின் பேரில்  காவல் துறை மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையால் சாராயம் விற்பனை செய்தவர்கள், வெளிமாநில சாராயத்தினை கடத்தியவர்கள், கள்ள சந்தையில் மது பாட்டில் விற்பனை செய்பவர்கள் என 178 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அது தொடர்பாக 170 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

மேலும் கள்ளச்சாராய வியாபாரிகளிடமிருந்து காவல்துறையினர் 4000 லிட்டர் கள்ளச்சாரத்தை கைப்பற்றிய நிலையில் கீழே கொட்டி அழித்தனர். திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், கொரடாச்சேரி ,குடவாசல், நன்னிலம், பேரளம், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ,மன்னார்குடி, வடுவூர் கூடூர் வலங்கைமான் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராய  விற்பனையை தடுக்கும் வகையில் இத்தகைய சோதனை நடைபெற்றதாகவும் தொடர்ந்து சோதனை நடைபெறும் எனவும் மாவட்ட காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது

மேலும் மாவட்டத்தில் இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் எச்சரித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here