கும்பகோணம், மே. 30 –

கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான பெருநலமாமுலையம்மன் சமேத மகாலிங்கசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

இத்தலத்தை சுற்றி நான்கு திசைகளிலும் சிவதலங்கள் அமையப்பெற்று, நடுநாயகமாக இத்தலம் அமையப்பட்;டுள்ளதால் இது பஞ்சலிங்கத்தலம் என்ற பெருமை பெற்றதாகப் போற்றப்படுகிறது.

இத்தலத்தில், சந்திரன், விநாயகபெருமான், அம்பிகை, அகத்திய முனிவர் உள்ளிட்ட முனிவர்களுக்கும், இறைவன் ஜோதி வடிவமாகவும், ஏகநாயக வடிவமாகவும் காட்சியளித்துள்ளார் என இத்தல வரலாறு தெரிவிக்கிறது.

மேலும் வரகுண பாண்டியன் இத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்து சென்ற பின்னர் தான் அவருக்கு பிடித்திருந்த, பிரமஹத்தி தோஷம் நீங்க பெற்றதாகவும் தல வரலாறு கூறுகிறது.

இத்தலத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் 27 லிங்கங்கள் தனி தனியே ஆடல் வல்லான் மண்டபத்தில் உள்ளது. இது காசிக்கு நிகரான தலமாகும் என வரலாறு கூறுகிறது. மேலும் இத்தலம் குறித்து, பட்டினத்தார், அருணகிரிநாதர், சுந்தரர், திருநாவுக்கரசர், திருஞானசம்மந்தர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட பல அடியார்கள் போற்றி பாடியுள்ளனர்.

மேலும் இது பத்திரகிரியார் முத்தி பெற்ற தலமாகும் 1755 ஆம் ஆண்டு முதல் இத்தலத்தில் கார்த்திகை நிறைவு சோமவாரத்தில் லட்ச தீபம் ஏற்றும் வைபவம் நடந்து வருகிறது என்பது வரலாறு இதனை நினைவுபடுத்தும் வகையில் விளக்குடன் கூடிய பாவை சிலை இத்தலத்தில் அமைந்துள்ளது

இத்தகைய சிறப்பு பெற்ற சைவத்திருத்தலத்தில் ஆண்டு தோறும் வைகாசி பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம் அதுபோல இவ்வாண்டு, கடந்த 24 ஆம் தேதி தொடங்கி தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. விழாவின் ஆறாம் நாளான இன்றிரவு‍ உத்திரநட்சத்திரம் தனுர் லக்னத்தில் ஸ்ரீ மகாலிங்கம் பெருமானுக்கு ஸ்ரீ பிரகத்சுந்தர குஜாம்பிகைக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.

முன்னதாக சீர்வரிசைகள் சமர்பித்தல் மாலை மாற்றும் வைபவம் ஊஞ்சல் மற்றும் நலங்கு வைத்தல் நிகழ்வு நடந்த பிறகு  நாதஸ்வர மேள தாளம் முழங்க, சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் ஜபிக்க, அக்னி வளர்த்து திருமாங்கல்ய தாரணம் நடைபெற்றதை தொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாளுக்கும் கோபுர ஆர்த்தியுடன் 16 விதமான சோடச உபசாரங்கள் செய்யப்பட்டு பஞ்சார்த்தியும் செய்யப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here