மீஞ்சூர், ஏப். 12 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட மீஞ்சூர் பேரூராட்சியின் மன்ற உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டம் இன்று அவ்வலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் நடைபெற்றது,
மேலும், இப்பேரூராட்சியின் தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமை யில் தடைப்பெற்ற இக்கூட்டத்தில், அப்பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றியரசு, துணைத் தலைவர் அலெக்சாண்டர், உள்ளிட்டவர்கள் அக்கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்.
மேலும் இன்று நடைப்பெற்ற இப்பேரூராட்சி மன்றத்தின் மாதாந்திரக் கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை தலைமை எழுத்தர் அன்பரசு வாசித்தார்.
மேலும் இக்கூட்டத்தில் அப்பகுதி மக்களுக்கு தேவையானதும் உடனடியாக செய்து முடிக்க வேண்டிய குடிதண்ணீர், சாலைகள் அமைத்தல், மற்றும் மின்விளக்கு வசதி செய்துக் கொடுத்தல் உள்ளிட்ட தேவைகள் குறித்து அம்மன்ற உறுப்பினர்கள் விவாதித்தனர்.
மேலும், இக்கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் சுமதி தமிழ்உதயன், அபூபக்கர், புதுப்பேடு ரஜினி, பரிமளா அருண்குமார், உள்ளிட்ட இம்மன்ற உறுப்பினர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் பங்கேற்று தங்கள் வார்டுக்கு உடனடியாக தேவைப்படும் மக்கள் அடிப்படை வசதிகள் குறித்து உரை நிகழ்த்தினார்கள்.





















