மீஞ்சூர், ஏப். 03 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட பட்டமந்திரி கிராமத்தில் திமுகவின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பிறந்தநாள் விழா, தமிழக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம், மற்றும் நலதிட்டங்கள் வழங்கும் விழாவென முப்பெரும் விழா நடைப்பெற்றது.
மேலும் இக்கூட்டத்திற்கு திருவள்ளூர்மாவட்டச் செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே கோவிந்தராஜன் தலைமை ஏற்றார். மேலும், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் கே. ஜி.பாஸ்கர் சுந்தரம், மாவட்ட அவைத் தலைவர் பகலவன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி , மாவட்ட துணை செயலாளர் கதிரவன், சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வசேகரன், உள்ளிட்டவர்கள் இம் முப்பெரும் விழாவிற்கு முன்னிலை வகித்தனர்.
மேலும் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் ஆவடி சா.மு நாசர், தலைமை கழக திமுக பேச்சாளர், மாநில பிரச்சார குழு செயலாளர் சேலம் சுஜாதா. உள்ளிட்டவர்கள் இம் முப்பெரும் விழாவில் பங்கேற்று தமிழகத்தில் நடைபெற்று வருவது சிறப்பான ஆட்சி என்றும், பெண்களுக்கும், மாணவர்களுக்கும், முன்னுரிமை வழங்கி அவர்களின் முன்னேற்றத்திற்கு சிறப்பான திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வருவதாகவும், மேலும் தமிழக மக்களை கொரோனா என்ற கொடிய நோயிலிருந்து மீட்டெடுத்த சிறந்த தலைவர் ஸ்டாலின் எனவும் அப்போது அவர்கள் முதலமைச்சருக்கு புகழாரம் சூட்டினார்கள்.
மேலும் இம்முப்பெரும் விழாவில் மகளிருக்கு புடவைகளும், கட்சியின் மூத்த முன்னோடிகள், ஆட்டோ டிரைவர்கள், சிறு தொழில் செய்யும் மகளிருக்கு தொழிலுக்கான உபகரணங்களும், திமுக நிர்வாகிகளுக்கு ஊக்கத்தொகைகளும் வழங்கப்பட்டது.
மேலும் இவ்விழாவில் வீடு இழந்த மகளிருக்கு ரூ. 25,ஆயிரமும், பொருளாதாரத்தில் நலிவுற்ற மகளிருக்கு ரூ. 10 ஆயிரமும், என்றவாறு பல்வேறு நல திட்டங்களை அவ்விழா மேடையில் வழங்கினார்கள்.
மேலும் இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும், மிகச்சிறப்பாகவும், பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுகச் செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் நிறைவாக செய்திருந்தார். மேலும் இதில் மீஞ்சூர் பேரூராட்சியின் தலைவர் ருக்மணி மோகன்ராஜ், மீஞ்சூர் நகர கழக செயலாளர் தமிழ்உதயன், அத்திப்பட்டு எம்.டி.ஜி. கதிர்வேல் , மேலூர் வில்சன், உள்ளிட்ட மாவட்ட ,ஒன்றிய, நகர, ஊராட்சி செயலாளர்கள், கிளை கழக திமுக செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களும் மேலும் திரளான அப்பகுதி வாழ் பொதுமக்களும் கலந்து கொண்டனர், இவ் விழாவின் நிறைவாக இவ்விழாவிற்கு வருகை தந்து விழாவினை சிறப்பாக நடத்திட உறுதுணையாகயிருந்த அனைவருக்கும் முன்னாள் மாவட்ட பிரதிநிதி தமிழரசன் நன்றி தெரிவித்து உரை நிகழ்த்தினார்.