திருவாரூர், மார்ச். 30 –
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஶ்ரீ தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அத்தனை துறை அதிகாரிகளும் மற்றும் 200க்கும் மேற்பட்ட விவசாயிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேலும் இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்கள். மேலும் தற்போது உள்ள கோடையை பயன்படுத்தி திருவாரூர் மாவட்டத்தில் தூர்வாரப்படாத பாசனவடிவரத்து கால்வாய்கள் மற்றும் கிளை ஆறுகள், பெரிய ஆறுகள் முதலானவற்றை தூர்வாரி இந்த ஆண்டு மேட்டூர் அணை தண்ணீர் விரைந்து கடைமடைக்கு செல்ல வழிவகை ஏற்படுத்துமாறு அப்போது மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.
மேலும் குருவை சாகுபடிக்கு தேவையான முன்னேற்பாடுகளை அரசு விரைந்து செய்ய வேண்டும் எனவும், மேலும், தேவையான உரங்கள் விதைகள் இடுபொருட்கள் ஆகியவற்றை விவசாயிகளுக்கு மானியத்தில் கொடுக்க தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அப்போது அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் குறிப்பாக திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பணியிடம் மாற்றம் செய்யப்படாமல் ஒரேயிடத்தில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்களால் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக அப்போது அவர்கள் குற்றம் சாட்டினார்கள் மேலும் அதுக்குறித்து மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி கோரிக்கை விடுத்தனர்.
மேலும் இது தொடர்பாக ஏற்கனவே உளுந்து பயிர் காப்பீடு முறைகேடு, மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம், திருவாரூர் மாவட்டம் முழுவதும் குருவை இலவச உரத் தொகுப்பிற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகைப்படம் அச்சிடப்பட்ட நுண்ணூட்டங்களை விவசாயிகளிடம் காசு பெற்றுக்கொண்டு கொடுத்த முறைகேடு முதலானவற்றில் முறைகேடுகள் நடைபெற்று ஊடகங்களில் செய்தி வெளியான பின்பும் அந்த அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் சரியான முறையில் எடுக்கப்படவில்லை எனவும், மேலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்களை பணியிடம் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.
பேட்டி முகேஷ் விவசாயி




















