திருவாரூர், மார்ச். 25 –
திருவாரூர் ரயில் நிலையம் முன்பு இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் ராஜா தலைமையில், ராகுல் காந்தியின் எம்பி பதவியினை பறித்த மோடித் தலையிலான பாஜக அரசை கண்டிக்கும் வகையில், வாயில் துணியைக் கட்டிக்கொண்டு நூதனமுறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் அவர்கள் பல்வேறு முழக்கங்களை உரத்த குரலில் முழங்கினார்கள்.
மேலும், வாயில் துணியை கட்டிக் கொண்டு நூதன முறையில் பாஜக அரசை கண்டித்து நடைப்பெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளான இளைஞர் காங்கிரஸார் மற்றும் மகளிர் அணியைச் சேர்ந்த மகளிர் பங்கேற்றனர்.




















