திருவாரூர், மார்ச். 24 –
திருவாரூரில் அதிமுக நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி மகளுக்கும் வி.கே. சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவகுமாரின் மகனுக்கும் இன்று திருவாரூர் தனியார் திருமண அரங்கில் நிச்சயதார்த்த விழா நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் வி.கே. சசிகலா அவரது சகோதரி இளவரசி, சகோதரர் திவாகரன் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றம் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
மேலும் இந்நிகழ்வின் இறுதியில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது வி.கே. சசிகலா செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில்
செ. கேள்வி –
சட்டசபையில் அதிமுகவினரிடையே நடைப்பெற்ற மோதல் தொடர்ந்தால், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் திமுகவிற்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும் என நீங்கள் கருதுகிறீர்களா?
வி.கே.எஸ் பதில் –
நிச்சயம் ஏற்படாது அப்படி ஏற்படும் அளவிற்கு நான் விடமாட்டேன். நிச்சயமாக எல்லோரும் ஒன்றிணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம் என கூறினார். தற்பொழுது அதிமுகவின் தோல்விக்கு பிரிந்து இருப்பது தான் முக்கியமான காரணம் அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்கு நான் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்குள் அனைவரையும் ஒன்று சேர்ந்து அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என அப்போது தெரிவித்தார்.
மேலும் ஓ பன்னீர்செல்வம் தன்னை வந்து சந்திப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் எங்களுடைய கட்சிக்காரர்கள் இடையே வித்தியாசம் ஒன்றும் நாங்கள் பார்ப்பது கிடையாது என தெரிவித்தார்.
பேட்டி சசிகலா





















