பொன்னேரி, மார்ச். 24 –
திருவள்ளூர் மாவட்டம் மெதூர் ஊராட்சிப் பகுதியில் இன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் மோடிக் குறித்து 2019 ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது சர்ச்சைக்குரிய விமர்சனம் செய்ததாகக்கூறி அந்நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மீது அவமதிப்பு வழக்கு பாஜக சார்பில் தொடரப்பட்டது.
இவ்வழக்கில் குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் அவருக்கு நேற்று இரண்டாண்டுகள் தண்டனை விதித்தும் மேலும் இவ்வழக்கு தொடர்பாக ராகுல்காந்தி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் காலவகாசமும் கொடுத்துள்ள நிலையில், பாஜகவின் ஒன்றிய அரசைக் கண்டித்து நாடுமுழுவதும் அகில இந்திய காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்ங்கள் நடைப்பெற்று வருகிறது.
அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி நேற்று கும்பகோணத்தில் இரயில் மறியல் போராட்த்தில் ஈடுப்பட்டார்.அதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் நேற்றும் இன்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் அதன் பகுதியாக இன்று திருவள்ளூர் மாவட்டம் மெதூர் வட்டாரத்தில் அக்கண்டன ஆர்ப்பாட்டம் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பொன் மகேஷ் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் சந்திரசேகர். மெதூர் வட்டார பொறுப்பாளர்கள். உதய காந்தி.சுரேஷ். மகிலா காங்கிரஸ் மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் லதா. வட்டார துணை செயலாளர் பரசுராமன். உமாமகேஷ். பொன்னேரி நகர துணைத் தலைவர் ஜான். திருப்பாலைவனம் பிசிசி வினோத். மாவட்ட மீனவர் அணி சஞ்சய்காந்தி. மாவட்ட மகளிர் அணி செயலாளர் எழிலரசி. உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
மேலும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது பங்கேற்ற திரளான காங்கிரஸ் தொண்டர்கள் மத்திய அரசைகண்டித்தும் ராகுல் காந்தியின் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் இது தொடர்ந்தால் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் தீவிரமடையும் என்றவாறு முழக்கமிட்டனர்.
மேலும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் தொகுதி தலைவர் பொன்வேல். வட்டாரத் துணைத் தலைவர்கள் பரந்தாமன். பாஸ்கர். பனப்பாக்கம் கதிரவன். வேம்பேடு விஜயசங்கர் உள்ளிட்டவர்களும் திரளான காங்கிரஸ் கட்சித் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.






















