மன்னார்குடி, மார்ச். 16 –

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திருவாரூர் மாவட்டத்திற்கு வருகைத் தந்துள்ள இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை மன்னார்குடி பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு,  இரவு திருவாரூர் ஆய்வு மாளிகையில் தங்கினார்.

ந்நிலையில், அவர் தங்கி இருந்த ஆய்வு மாளிகையில், இன்று காலை அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த வில்வித்தை, கராத்தே, யோகா போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அளவிலும் மாநில அளவிலும் வெற்றி பெற்ற திருவாரூர் மாவட்ட மாணவர்கள் அமைச்சர் உதயநிதியை நேரில் சந்தித்து அவரிடம் வாழ்த்து மற்றும் பாராட்டுகளையும் பெற்றனர்.

இந்த நிகழ்வில் அமைச்சர் மெய்யநாதன், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா, திருவாரூர் மாவட்ட திமுக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here