சோழபுரம், மார்ச்.16 –
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஞாயிறு கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் பூமிக்கடியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
மேலும் இங்கு திருக்கோவில் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையின் பேரில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திடீர் வருகை தந்து களஆய்வு மேற்கொண்டார்.
மேலும், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை,சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராசன், அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன், சிறுவாபுரி முருகன் கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார், உள்ளிட்டோருடன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பழமை வாய்ந்த திருக்கோயில்களை புனரமைக்க 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு 104 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மேலும் ஞாயிறு கிராமத்தில் உள்ள சூரிய பரிகாரஸ்தலமான புஷ்பரதேஸ்வரர் கோவில் கடந்த 2006ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் தற்போது 40லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் . மேலும் ஞாயிறு கிராமத்தில் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பூமிக்கடியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஆலயம் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் மேலும் அருமந்தை கிராமத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவில் திருப்பணிகள் மேற்கொள்ள கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாக அப்போது அவர் தெரிவித்தார்.
மேலும் கோவில் நிலத்தில் வசிப்பவர்களிடம் வாடகை வசூலித்து கோவிலுக்கான பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். இதில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் புழல் நாராயணன் ஒன்றிய திமுக செயலாளர்கள் செல்வசேகரன்.காணியம்பாக்கம ஜெகதீசன் உள்ளிட்ட திரளான கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.