கும்பகோணம், மார்ச். 14 –
கும்பகோணம் அருகே, பாபநாசம் தாலுக்கா, அய்யம்பேட்டை அடுத்த தாளக்குடி கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகள் விஷாலி (வயது 17) இவர் பசுபதி கோவில் புனித கபிரியல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில், நேற்று நடைப்பெற்ற ப்ளஸ் பொதுத்தேர்வின் முதல் நாள் தேர்வு எழுதிவிட்டு பள்ளியிலிருந்து அவருடைய உறவினரான தாளக்குடியைச் சேர்ந்த பிரதீப் (வயது 26) என்பவர் இருசக்கர வாகனத்தில் மாணவி விஷாலியை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்துக் கொண்டிருந்த வேளையில், நல்லிச்சேரி மெயின் ரோட்டில் அவ்வாகனம் நிலை தடுமாறி சாலை ஓரம் இருந்த மாமரத்தில் மோதி இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானது.
இதில் சம்பவ இடத்திலேயே பிரதீப் மற்றும் பள்ளி மாணவி விஷாலி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலயறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அய்யம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் வனிதா மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இவ்விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து அவர்கள் தொடர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்சியையும் பெருத்த சோகத்தையும் ஏற்படுத்திவுள்ளது.



















