கும்பகோணம், ஜன. 20 –

திருவிடைமருதூர் அடுத்த நவகிரக கோயில்களில் பிரதானமாக விளங்கும் பிரசித்தி பெற்ற சிவசூரியனார் கோயிலில் ரதசப்தமி பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

திருவிடைமருதூர் தாலுகா, நவகிரக கோவில்களில் பிரதானமாகவும், சூரியனின் சிறப்பு ஸ்தலமாகவும், இருந்து வரும், திருக்கைலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான சிவ சூரியனார் திருக்கோயிலில் இன்று ரத சப்தமி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக கோயிலின் கொடி மரத்திற்கு அருகே சிறப்பு மலர் அலங்காரத்தில் உஷா தேவி சாயா தேவி சமேத சிவசூரிய பெருமான், விநாயகர் அஸ்திரதேவர் எழுந்தருள கோயிலின் கொடிமரத்திற்கு பால் தயிர் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும் தொடர்ந்து குதிரை உருவம் பொறிக்கப்பட்ட அஸ்வ கொடி ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

ரதசப்தமி பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக வருகிற 22 ஆம் தேதி கோயிலின் அனைத்து தெய்வங்களுக்கும் சந்தன காப்பு அலங்காரமும் 24 ஆம் தேதி, சகோதர காட்சியும், 26 ஆம் தேதி, திருக்கல்யாண பிரம்மோற்சவமும், 28ஆம் தேதி, ரத சப்தமி திருத்தேர் வடம் பிடித்த நிகழ்வும், 29ஆம் தேதி, தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறுகிறது.

நவகிரக கோவில்களில் பிரதானமாக விளங்கும் சிவ சூரியனார் கோயிலில் இன்று நடைப்பெற்ற ரத சப்தமி பெருவிழா கொடி ஏற்ற நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here