உத்திரமேரூர், ஜன. 07 –
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம் 12 அனுமன் தண்டலம் கிராமத்தில். பல ஆண்டுகளாக மயானத்திற்கு செல்வதற்கு வழிப் பாதை இல்லாமல், தனியாருக்கு சொந்தமான நிலத்தின் வழியாகவும், நீர்நிலையான உத்திரமேரூர் ஏரிக்குச் செல்லும் கால்வாய் வழியாகவும், மேலும் முற்கள் நிறைந்த பகுதிகளின் வழியாக இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய எடுத்து சென்று வருவதாக அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அவர்கள் தெரிவிக்கும் போது, எங்கள் பகுதியில் மயானத்திற்கு செல்வதற்கு நல்பாதையை மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி அமைத்து தர வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து, இது தொடர்பாக பல ஆண்டுகளாக காஞ்சிபுரம் ஆட்சியரை சந்தித்து மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து ஆய்வு செய்ததாகவும், அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து, கடந்த 19 .10 .2022 ஆம் தேதியன்று மயான பாதை சம்பந்தமாக காஞ்சிபுரம் மாவட்ட DRO மற்றும் அத்துறை சார்ந்த அதிகாரிகள் அக் கிராமத்திற்கு வந்து மயான பாதை செல்வதற்கு ஆய்வுகளை மேற் கொண்டதாகவும் தெரிவித்தனர்.
அதன் தொடர்ச்சியாக RI மற்றும் VAO குழுவினர் மயானத்திற்கு செல்லும் பாதைக் குறித்த வரைபடம் தயார் செய்யப்பட்டதாகவும், அதனை DRO கோட்டாட்சியருக்கு அனுப்பி வைத்தும் இதுவரை எந்த பயனும் இல்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதன் பின்பு 6.1.2023 அன்று அனுமன் தண்டலம் கிராமம் மயான சாலை சம்பந்தமாக SC.ST உயர் அதிகாரிகள் கிராமத்திற்கு வந்து மயானம் பாதை செல்லும் வழிகளில் தனியாருக்கு சொந்தமான நிலங்கள் அந்த உரிமையாளர்களிடம் பேசி முடிவு செய்யப்பட்டு சென்றுள்ளார்கள்
மேலும் அக் கிராம பொதுமக்கள் தொடர்ந்து ஆய்வு பணிகளை மட்டும் எடுத்து வரும் மாவட்ட நிர்வாகம் தங்கள் பகுதியின் இப்பிரச்சினையை தனிக்கவனம் செலுத்தி உடனடியாக மயானப் பாதை அமைத்து தர வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு விடுத்துள்ளனர்.