பொன்னேரி, ஜன. 06 –

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள் திருப்பாலைவனம் கிராமத்தில் இன்று திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சமத்துவ பொங்கல் திருவிழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் 27 பானைகளில் கிராமப்புற பெண்கள் உலை வைத்து போங்கல் பொங்கியெழும் போது குலவைச் சத்தம் எழுப்பி உளம் மகிழ்ந்தனர்.

தொடர்ந்து, பச்சரிசியில் செய்த பொங்கலை அங்குள்ள அங்காளம்மன் ஆலயத்தில் சாமிக்கு படைத்தனர். மேலும், மாவட்ட செயலாளர் செந்தில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அரசு தொடர்பு பிரிவு மாநில தலைவர் அழிஞ்சுவாக்கம் பாஸ்கர் சிறப்பு அழைப்பாளராக இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

மேலும், பொங்கல் நிகழ்ச்சி ஏற்பாட்டினை மாவட்ட பொறுப்பாளர் நெல்லை பாலன், பாஜக நிர்வாகிகள் சந்திரமவுலி மற்றும் கலைவாணி ஆகியோர் ஏற்பாடு செய்துயிருந்தனர்.

இதில் ஏராளமான பாஜக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நகர ஊராட்சிப்பகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

பொன்னேரி சட்டமன்ற பொறுப்பாளர் அன்பாலய சிவகுமார், மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் முத்தா சரவணன், மீஞ்சூர் பேரூர் தலைவர் சிவராஜ், பொன்னேரி கோட்டி, ஒன்றிய துணைத் தலைவர் ஜெயபால் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

மார்கழி மாதத்தின் பெளர்ணமி நன்னாளில், திருவாதிரை நட்சத்திரத்தில் நடராஜ பெருமானின் தரிசனம் காணும் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சியும் நடைபெற்றது இதில் மாவட்ட தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here