கும்பகோணம், ஜன. 05 –
கும்பகோணம் அருகே உள்ள பவுண்டரீகபுரம் ஊராட்சிப்பகுதியில் உள்ள அக்ரகாரம் பிள்ளையார் கோவில் அருகில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் பாஜக மாவட்ட தலைவர் சதீஷ்குமார் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போது தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பொங்கல் கொண்டாட்டங்கள் களைகட்டவில்லை. எனவும் எனவே இவ் ஆண்டு நடைப்பெறும் பொங்கல் திருவிழா வழக்கமான உற்சாகத்துடனும், கொண்டாட்டங்களோடும் நடைபெற உள்ளது எனவும் அப்போது அவர் தெரிவித்தார்.
எனவே கிராம மக்கள் அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்து தமிழர் பண்டிகையாம் பொங்கல் திருநாளை மிகச் சிறப்பாக கொண்டாட வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா நிகழ்வில் பெண்கள் பொங்கலிட வரிசையாக தனித்தனியாக அடுப்பு மூட்டி பொங்கல் பானை வைக்கப்பட்டிருந்தது.
அதனருகில் பொங்கலிடத் தேவையான பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், முந்திரிப்பருப்பு ஆகியவை அடங்கிய ஓலைப்பெட்டியும் வைக்கப்பட்டிருந்தன.
பாரம்பரிய உடையில் தயாராகி வந்திருந்த கிராமத்து பெண்கள் தனித்தனியாகப் பொங்கல் வைத்தனர். பானையில் பொங்கல் பொங்கி வரும் போது, குலவைச் சத்தம் எழுப்பி “பொங்கலோ பொங்கல்” என அவர்கள் இட்டக் குலவைச் சத்தம், வின் முட்ட எழுந்தமர்ந்தது. மேலும் சமத்துவ பொங்கல் நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் மிகச் சிறப்பாக இவ்விழாவனை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இவ்விழா ஒன்றிய தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் ஆத்தூர் கணேசன் மாவட்டச் செயலாளர் பாலகுரு மகளிர் அணி தலைவி சுனிதா மாவட்ட பொதுச்செயலாளர் லட்சுமி மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட திரளனாவர்கள் பங்கேற்று விழாவினை சிறப்படையச் செய்தனர்.
























