கும்பகோணம், ஜன. 01 –
கும்பகோணம் அருகே உள்ள தத்துவாஞ்சேரி அனைத்து வணிகர் நல சங்கம் சார்பில் கொடியேற்றுதல், வணிகர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியம், தத்துவாஞ்சேரி அனைத்து வணிகர் நல சங்கம் சார்பில் அதன் தலைவர் முகமதுசுகையல் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கெளரவ தலைவர் அசோகன், பொருளாளர் ரகுராமன், செயலாளர் உதயக்குமார், துணைத் தலைவர் அக்பர் அலி, செயலாளர் அன்சாரி, துணைச் செயலாளர் கிருஷ்ணப்பா, இணைச் செயலாளர் ஹாஜாமைதீன் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் என திரளானவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேலும், இந்நிகழ்ச்சியில் பேரமைப்பு சார்பில் புதிய மூவர் வண்ணக் கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, டெல்டா கூட்டமைப்பு புதிய பொறுப்பாளர்களை இக்கூட்டத்தில் அறிமுகம் செய்யும் நிகழ்வு நடைப்பெற்றது.
இதனைத்தொடர்ந்து சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. தொடர்ந்து, இக்கூட்டத்தில் தத்துவாஞ்சேரி கடைத்தெருவில் 12 சிசிடிவி கேமரா அமைக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.