கும்பகோணம், டிச. 20 –

கும்பகோணத்தில் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி சர்வ மங்கள மண்டபத்தில் வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது.

இதில் சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவர் சேட்டு என்கிற அருள்குமார் செயலாளர் ஆறுமுகம் பொருளாளர் குணசேகரன் மாவட்ட அட்வைசர் கணேஷ் மாவட்ட துணை ஆளுநர் வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக செல்வநாதன் செங்குட்டுவன் பாஸ்கரன் மற்றும் முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் கோவிந்தராஜ் வசீகரன் ரவீந்திரன் நாகராஜன் அருண்மொழி செல்வன் மருத்துவர் பழனிவேல் விஸ்வேஸ்வரன் குணசேகரன் மணி ரமேஷ் பாபு மணிமாறன் பாலாஜி பாபு பாலாஜி பொருளாளர் ராஜகோபாலன் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

இச்சங்கம் கடந்த 1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 25 ஆண்டுகளாக பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம் மற்றும் சேவைகளை செய்து வருகிறது.

தொடர்ந்து சென்ட்ரல் ரோட்டரி சங்கம் வரும் ஆண்டுகளில் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்த்தல் மற்றும் பொதுமக்களுக்கு பயனுள்ள சேவைகள் நலத்திட்ட உதவிகள்  வழங்குதல் மருத்துவ முகாம் நடத்துதல் உள்ளிட்ட குறித்து இவ்விழவில் விவாதித்தனர். தொடர்ந்து 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை கொண்டாடும் இசங்கம் சார்பில் மத்திய அரசு அனுமதியுடன் சிறப்பு தபால் உரை வெளியிடப்பட்டது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here