திருவாரூர், டிச. 02 –

மாதந்தோறும் வட்டாரத்திற்கு 30பேர் வீதம் வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவாரூர் சுகாதாரத் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு சி ஐ டி யு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊதியத்தை நேரடியாக மருத்துவத்துறை மூலம் வழங்க வேண்டும் மாதம் தோறும் வட்டாரத்திற்கு 30 பேர் வீதம் வேலை வழங்கிட வேண்டும் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் மீது எடுத்துவரும் தொழிலாளர் விரோத போக்கை கைவிட வலியுறுத்தி டெங்கு கொசு ஒழிப்பு சங்கத்தின் கௌரவ தலைவர் முரளி தலைமையில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள், என் எம் ஆர் ஊழியர்கள் சங்கம், டெங்கு மஸ்தூர் ஊழியர்கள் சங்கம் மற்றும் சிஐடியு சங்கத்தினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, திருவாரூர் சுகாதார துணை இயக்குனர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கோட்டூர் சுரேந்தர் நன்னிலம் கணேசன் சிஐடியு மாவட்ட செயலாளர் முருகையன் சிஐடியு மாவட்டத் தலைவர் அனிபா மாநில குழு உறுப்பினர் பிரேமா சிஐடியு மாவட்ட பொருளாளர் மாலதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here