கும்பகோணம், அக். 08 –
கும்பகோணத்தில் செட்டி மண்டபம் புறவழிச் சாலையில் உள்ள கார்த்தி வித்யாலயா பள்ளியில் 2 வயது முதல் 4 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் போட்டி அப்பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.
தினமும் அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டினால், மூளையின் செயல்பாடுகள் அதிகரித்துச் சுறுசுறுப்பு உண்டாகும். சைக்கிள் ஓட்டுபவர்களது மூளையின் செயல்திறன் அதிகரிக்கும். மனதளவில் புத்துணர்ச்சி கிடைக்கும். மனஅழுத்தம், மனச்சோர்வு போன்ற பிரச்சனைகளுக்கெல்லாம் சிறந்த மருந்தாகும். சைக்கிள் ஓட்டுவது என்பது மிகச் சிறந்த உடற்பயிற்சியாகும். வெறும் போட்டியாக மட்டுமல்லாமல் குழந்தைகளின் உடல்நலத்தை பேணி காக்கும் வகையிலும் ஆரோக்கியமாக இருப்பதற்காகவும் இதுப்போன்ற போட்டிகள் வழி வகுக்கும் என்ற அடிப்படையில் இப்போட்டிகள் நடைபெற்றது.
இப்போட்டியில் கும்பகோணம் பகுதியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள மழலையர் வகுப்பு குழந்தைகளும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மேலும் இப்போட்டி மூன்று நிலைகளில் நடைபெற்றது முதல் இடம் பிடித்த குழந்தைகளுக்கு தங்க நாணயங்களும், அடுத்தடுத்து 2ம் இடம், 3ம் இடம் ,4ம் இடம் பிடித்த ,5ம் இடம் பிடித்த குழந்தைகளுக்கு வெள்ளி நாணயமும், பரிசாக வழங்கப்பட்டது.
இப்போட்டிக் குறித்து பூர்ணிமா கார்த்திகேயன் கூறுகையில் இப்போட்டியானது குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையிலும், புத்துணர்ச்சி அளிக்கும் விதமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டது, என்று கூறினார். மேலும் இப்போட்டியில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளும் வெற்றி பெற்றவர்களே என்று கூறி அனைத்து குழந்தைகளுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. இப்போட்டியில் நூற்றுக்கு மேற்பட்ட பெற்றோர்களும், குழந்தைகளும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் சான்றிதழ்களும், வழங்கப்பட்டன. என்பது குறிப்பிடத்தக்கது.