காஞ்சிபுரம், அக். 03 –

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாகறல் கிராமத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, ஏழாம் வகுப்பு படிக்கும் மதன் என்ற பள்ளி மாணவன் சுயமாக களிமண்ணாலான பொம்மைகளை செய்து கொலு அமைத்துள்ளார்.

மாகறல் கிராமத்தைச் சேர்ந்த கவியரசு லட்சுமி தம்பதியினரின் மகன் மதன் அக்கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார் நவராத்திரி விழாவை முன்னிட்டு அவரது இல்லத்தில் 9 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு படிக்கட்டுகளிலும் களிமண்ணால் அவரே  சாமி சிலைகளை சுயமாக செய்து நவராத்திரி கொலு அமைத்துள்ளது அப்பகுதியில் உள்ள மக்களை மிகவும் கவர்ந்துள்ளது.

கொரோனா காலகட்டத்தில் தொடர்ந்து  வீட்டில் இருந்தபோது தனது தாத்தாவிடம் உரையாடிய போது அவரது தாத்தா அவருக்கு நேரத்தை வீணாக்காதே நேரத்தை ஏதாவது ஒரு நல்ல வழியில் பயன் படுத்துமாறு அறிவுறுத்திவுள்ளார். அதனைத் தொடர்ந்து மதன் களிமண்களால் பல வகையான பொம்மைகளை செய்ய முயற்சி செய்து பயிற்சி எடுத்து வந்ததாக தெரிய வருகிறது.

மேலும், தாத்தா கூறியதால் விடாமுயற்சி செய்து மூன்றாவது வருடமாக தொடர்ந்து நவராத்திரி கொலு பொம்மைகளை களிமண்ணால் செய்து வழிபட்ட பள்ளி மாணவன் தன்னைப்போன்று நேரத்தை வீணாக்காமல் பெற்றோர்களின் வார்த்தையை கேட்டு நல்ல வழியில் செல்ல வேண்டும் என சக மாணவர்களுக்கு அறிவுறுத்துகிறார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here