திருவாரூர், அக். 03 –
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் டாக்டர் அம்பேத்கார் சிறப்பு மையம் சார்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவ மாணவிகளுக்காக ஐஏஎஸ் பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பை புதுச்சேரி மாநில துணை சபா நாயகர் ராஜவேலு குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்தார். தொடர்ந்து மாணவ மாணவிகள் இந்த பயிற்சியை எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பயிற்சியில் சேர்ந்து சாதிக்க வேண்டும் எனவும் உரை நிகழ்த்தினார்.
மேலும் இந்நிகழ்வில் பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி நாகராஜன் மற்றும் 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
பேட்டி: ராஜவேலு (புதுச்சேரி மாநில துணை சபாநாயகர் )