திருவள்ளூர், செப். 17 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் பிரதமர் நரேந்திர மோடியின் 72 பிறந்தநாள் விழா திருவள்ளூர் மாவட்டம் பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் வேல் மாரியப்பன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. நாகமணி. மாவட்ட செயலாளர் எல் நரசிங்கமூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் மாவட்ட பாஜக தலைவர் கும்மிடிப்பூண்டி சரவணன். மாவட்ட செயலாளர் புதுப்பேடு பரந்தாமன். பிறமொழி அணி பிரிவு செயலாளர் பிரகாஷ் சர்மா. மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பத்மநாபன். ஆன்மீகப்பிரிவு மாநில செயலாளர் குமார். மாவட்டத் துணைத் தலைவர் சோமு ராஜசேகர் . பொன்னேரி நகர தலைவர் வி மோகன். நகர பொது செயலாளர் சத்தியமூர்த்தி. உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
நரேந்திர மோடியின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும் கேக் வெட்டியும் கொண்டாடினார்கள். தொடர்ந்து விழாவில் பங்கேற்ற பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்.






















