திருவாரூர், செப். 14 –

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே பெரும்பண்ணையூர் கிராமத்தில் கடந்த செபடம்பர் 2 ஆம் தேதி தற்காலிக அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இந்நிலையில், நெல் கொள் முதல் நிலையம் திறக்கப்பட்டு  12 நாட்களாகியும் நேற்று வரை பணியாளர்கள் யாரும் வரவில்லை.என கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்து கொண்டு வந்த நெல்லை கொள்முதல் செய்யப்படாமல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் தற்பொழுது தமிழக முழுவதும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் நனைந்து சேதம் ஏற்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.

இதனால் கோபம் அடைந்த பெரும்பண்ணையூர் விவசாயிகள் தாங்கள்  அறுவடை செய்து, நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்த நெற்களை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தினர்.

அதற்காக விவசாயிகள் பெரும்பண்ணையூர் நெல் கொள்முதல் நிலையம் முன்பு கூடியிருந்தனர். விவசாயிகள் போராட்டம் குறித்து தகவலறிந்த திருவாரூர் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேலும் இது குறித்து மண்டல மேலாளர் செய்தியாளர்களிடம் இன்று நெல் கொள்முதல் நிலையம்  திறக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட விவசாயிகள் 12 தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படாது ஏன் என்பது போன்ற பல்வேறு கேள்விகளை முதுநிலை மண்டல மேலாளாரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, விவசாயிகளை சமாதானம் செய்த முதுநிலை மண்டல மேலாளர், 800 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்படும் என உத்தரவிட்டார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here