காஞ்சிபுரம், செப். 07 –
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆர்.கே. ஷர்ட்ஸ் பி லிமிடெட் காட்டுபுதூர் ஓலையூர் தொழிற்சாலையை சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனம் மற்றும் குடிசை மாற்று வாரியம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட திமுக செயலாளரும் உத்திரமேரூர் சட்டபேரவை உறுப்பினருமான .க.சுந்தர் Bsc இன்று திறந்து வைத்தார்கள்.
மேலும் இந்நிகழ்வில் சாலவாக்கம் ஒன்றிய கழக செயலாளர் தி.குமார் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் திருமதி.வசந்திகுமார் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சிவராமன் ஊராட்சி மன்ற தலைவர் முனுசாமி மற்றும் ஓடை R.பாபு துணை தலைவர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.























