காஞ்சிபுரம், செப். 07 –
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் அருள்மிகு ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் திருகோவிலுக்கு சொந்தமான இடத்தில் பிரசாந்த் மற்றும் நந்தகுமார் ஆகியோர் 28 லட்சம் ரூபாய் வாடகை செலுத்தாமல் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் வாடகை செலுத்தாமல் காஞ்சிபுரம் ஜவஹர்லால் தெருவில் காளிகாம்பாள் கோவிலுக்கு சொந்தமான 3 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை பூட்டி இருந்த பூட்டை உடைத்து உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக கோவிலுக்கு சொந்தமான இடம் என பெயர் பலகையை வைத்து சீல் வைத்தனர். இந்த பணியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முத்துரத்தினவேல் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், மின்சாரதுறை, வருவாய்துறை, காவல்துறை, என மொத்தம் 50 பேர் ஒன்றினைந்து இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை அதிரடியாக மீட்டனர். பல முறை நோட்டீஸ் வழங்கியும் வாடகை பக்கி செலுத்தாமல் இருந்ததால் இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.





















