தஞ்சாவூர், ஆக. 24 –

தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் உழவர் பயிற்சி நிலையம் சாக்கோட்டை தஞ்சாவூர் கிராம இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு நாளை ஆக 25 ஆம் தேதி முதல் ஒருமாத காலத்திற்கு அங்கக வேளாண்மை பற்றிய இப்பயிற்சி வகுப்பு கும்பகோணம் உதவி இயக்குநர் அலுவலகம் சாக்கோட்டையில் நடைப்பெறவுள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் பின் விளைவு கொண்ட ரசாயண வேளாண் முறையினை தவிர்த்து, இயற்கை ஆரோக்கியத்தை பாதுகாக்கக் கூடிய அங்கக வேளாண்மையை பின்பற்றுவது குறித்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது, மேலும் இதனால் வருங்கால சந்ததியர்களுக்கு நாம் ஆற்றும் மகாத்தான சேவையாகும். இப்பியிற்சி மூலம், தேவையில்லாத உரங்களை வயல்களுக்கு இடுவது, இரசாயண பூச்சிக்கொல்லிகளை வயல்களுக்கு இடாமல் தவிர்ப்பது போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

எனவே இப்யிற்சி வகுப்பில் கலந்துக்கொள்ள விரும்பும் இளைஞர்கள் மற்றும் மகளிர்கள் தங்களது, இரண்டு எண்ணிக்கையிலான பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், குறைந்தப் பட்ச கல்வித்தகுதியான பத்தாம் வகுப்பு படித்தற்கான கல்விச்சான்றிதழ் ஆகியவற்றின் நகல் ஆவணங்களை நாளை ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்குள் கண்ணன், வேளாண்மை அலுவலர், உழவர் பயிற்சி நிலையம், வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், காட்டுத்தோட்டம், தஞ்சாவூர் ஒப்படைத்திடுமாறு தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு செல்பேசி எண் 90955 81534 தொடர்புக்கொள்ளவும்.

இல்லையெனில் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநரிடம் ஒப்படைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பயிற்சியில் கலந்துக் கொண்டு தொழில் முனைவராக உருவாகி தங்களது வாழ்க்கையினை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஜஸ்டின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here