கும்மிடிப்பூண்டி, ஆக. 20 –
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஈகுவார்பாளையத்தை சேர்ந்தவர் சமூக சேவகாரும், ஊராட்சி மன்ற நிர்வாகியுமானவர் நா.சிவா இவருக்கு நீதியின் குரல் என்ற அமைப்பு வழங்கும் தேசத்தின் அடையாளம் விருதுகள் 2022 -ஆம் ஆண்டுக்கான நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி அதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மேடை நாடக மற்றும் பிரபல திரையுலக நகைச்சுவை நடிகரும், இயக்குனரும், முன்னாள் மைலாப்பூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ் வி சேகர் நல்லாசிரியருக்கான விருதினை ஆசிரியர் நா சிவாவிற்கு வழங்கினார்.
மேலும்,ஆசிரியர் நா சிவா, ஸ்ரீதேவி கலை கல்லூரியில் சிறந்த ஆசிரியர் விருது, சென்னை சென் ஜோசப் அசோசியேஷன் விருது, விருதுநகர் அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை சார்பாக 2022 – ஆம் ஆண்டிற்கான சிறந்த சமூக சேவகர் விருது என பல்வேறு விருதுகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.