மீஞ்சூர், ஆக. 13 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சியின் வார்டு எண் 5 ல் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார பேரணி நடைபெற்றது. இப்பிரச்சார பேரணிக்கு, பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் அலெக்ஸாண்டர் மற்றும் வரி விதிப்பு குழு தலைவர் சுமதி தமிழ் உதயன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில்.மக்கும் குப்பை, மக்கா குப்பை, குறித்தும், கொசு ஒழிப்பு, மரச் செடிகள் வளர்த்தல் குறித்து பேண்டு வாத்தியம் முழங்க வீடுகள் தோறும் நடைப்பயணமாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கப்படு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்நிகழ்வில், சுகாதார மேற்பார்வையாளர் ஆனந்தன் மற்றும் மகளிர் குழுவினர், பள்ளி மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர்.