திருவள்ளூர், ஆக. 05 –
எதிர் வருகின்ற ஆகஸ்ட் 15 ல் 75 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர பவள விழாவை, நாடு முழுவதும் கொண்டாட உள்ளது. இந்நிலையில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு சென்றும் மற்றும் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து. தேசியக்கொடியினை வழங்கி வருகிறார்கள்.
இந்நிலையில் அக்கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் அதன் தொடர்ச்சியாக இன்று திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் வட்டாரத்திற்கு வருகை தந்து, நெடுஞ்சாலையில் இந்து மக்கள் கட்சியின் கொடியினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து மீஞ்சூர் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அருகில் உள்ள ஸ்ரீ சந்திர பிரபு ஜெயின் கல்லூரியில் மாணவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கு பெற்று மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னி பாத் திட்டம் குறித்தும். 75 வது ஆண்டு சுதந்திர தினம் குறித்தும் விளக்கமாக பேசினார்.
தொடர்ந்து கல்லூரியின் அனைத்து மாணவர்களுக்கும் தேசியக்கொடியினை வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தவர். தேசிய தலைவர்களின் சிலைகளை கூண்டில் அமைத்தும், திராவிடத் தலைவர்களின் சிலைகளை வெளியரங்கமாக அமைத்தும் தமிழகத்தில் திராவிட ஆட்சி நடைபெற்று வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
நிகழ்ச்சியில் கல்லூரியின் பொறுப்பு முதல்வர் என். சுஜாதா, கல்லூரியின் மக்கள் தொடர்பு அதிகாரி பாலாஜி, உள்ளிட்ட திரளான கட்சித் தொண்டர்களும் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.




















