பொன்னேரி, ஜூலை. 31 –

திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட பொன்னேரி நகர திமுக செயலாளராக வழக்கறிஞர் ரவிக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  அதனைத் தொடர்ந்து அவர் நேற்று தலைவர்களின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்த போது திமுக கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்து, தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

வரவேற்பை ஏற்றுக்கொண்ட அவர் பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அங்கிருந்து நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று டாக்டர் அம்பேத்கர் சிலைக்கும், புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கும், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், உமாமகேஸ்வரி, பொன்னேரி நகர் மன்ற தலைவர் டாக்டர் பரிமளம்விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர் சுகுமார், செங்கல்வராயன், ராமலிங்கம், வாசுதேவன், ஜவகர், பரிதா ஜெகன், நீலகண்டன், கவுன்சிலர்கள் நல்லசிவம், இளங்கோ, தனுஷா தமிழ் குடிமகன்,மற்றும் கோளூர் கதிரவன், பொன்னேரி நகர இளைஞரணி அமைப்பாளர் திவாகர், முன்னாள் இளைஞர் அணி அமைப்பாளர் மா. தீபன், மற்றும் நகர்மன்ற தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் என திரளானவர்கள் உற்சாகத்துடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here