கும்பகோணம், ஜூன். 18 –
கும்பகோணம் அருகேவுள்ள திருச்சேறை மாற்றுத்திறனாளி பள்ளியில் 50க்கு மேற்பட்டோருக்கு திமுக மாணவரணி சார்பில் கலைஞரின் 99 வது பிறந்த நாளை மதிய உணவு வழங்கப்பட்டது.
திருச்சேறையில் உள்ள சுடர் மாற்றுத்திறனாளி பள்ளியில் 50க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக மாணவரணி சார்பில் மாணவரணி ஒன்றிய அமைப்பாளர் சுதாகர் தலைமையில் நடைப்பெற்ற கலைஞரின் 99 வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு மாற்றுத்திறானாளி மாணவர்களுக்கு மதிய உணவை அரசு தலைமை கொறடா கோவி செழியன் கலந்துகொண்டு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கூகுர் அம்பிகாபதி ஒன்றிய மாணவரணி பிரபாகரன் திருவிடைமருதூர் ஒன்றிய பெருந்தலைவர் சுபா திருநாவுக்கரசு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரவணன் ஒன்றிய அவைத்தலைவர் நெடுஞ்செழியன் ஒன்றிய துணைச் செயலாளர் சங்கர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயக்குமார் மாணவரணி ஒன்றிய துணை அமைப்பாளர் நவாஸ் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு உணவு வழங்கினார்கள்.




















