திருவாரூர். ஜூன். 13 –
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி பகுதியில் குரு ஸ்தலமாக போற்றப்படுகின்ற ஸ்ரீ அபய வரதராஜபெருமாள் சுவாமிக்கும் ஸ்ரீதேவி, பூமிதேவி தாயாருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
நேற்று மாலை சுப முகூர்த்தம் 7.30 மணி அளவில் தொடங்கி இரவு 9.30 மணி வரை திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது.
இத்திருமண நிகழ்வை சேங்காலிபுரம் ராஜகோபால பட்டாச்சாரியார் மற்றும் கீழஅமராவதி வெங்கட்ரமணி பட்டாச்சாரியார் ஆகியோர் கலந்து கொண்டு திருமண வைபவங்களை தலைமை ஏற்று நடத்தி வைத்தனர்.
மேலும், இந்நிகழ்வில் ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஏ .எம். மோகன் குடும்பத்தார்கள் மற்றும் உபயதாரர்கள் மற்றும் கிராமப் பொதுமக்கள் என திரளானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடந்த இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அருட் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
பேட்டி: பாலாஜி பட்டாச்சாரியார்
(சேங்காலிபுரம்)





















