ஆவடி, ஜூன். 08 –

திருவள்ளூர் மாவட்டம் சென்னை புறநகர் பகுதியான ஆவடியை அடுத்துள்ள பட்டாபிராம் தென்றல் நகர் பகுதியில் உள்ள எஸ்எஸ் சிட்டிசன் சிபிஎஸ் பள்ளி சார்பாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாணாக்கர்களின் விழிப்புணர்வு பேரணியில் சிறப்பு விருந்தினராக ஆவடி மாநகராட்சி சுகாதார செயல் அலுவலர் அப்துல் ஜாபர் ஆவடி மாநகராட்சி தலைமை மருத்துவர் ஹசின் முகமது பள்ளியின் தாளாளர் எஸ் ரவி சோமசுந்தரம் கலந்துகொண்டு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இப்பேரணி பட்டாபிராம் தென்றல் நகர் வழியாகப் புறப்பட்டு தண்டுறை பட்டாபிராம் பஜார் சாலை, வள்ளல் நகர், கோபாலபுரம் போன்ற பகுதியின் வழியாக சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள் கலந்துக்கொண்ட இப்பேரணி சென்றது.

இதில், உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாசக பதாகைகளை கையில் ஏந்தியபடி சுற்றுச்சூழல் பாது காக்க வேண்டிய அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விண் முட்டும் அளவிற்கு முழக்கங்கள் எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்ந்து ஆவடி மாநகராட்சி அலுவலகத்திற்கு உட்பட்ட குப்பைகள் தரம் பிரிக்கும் இடத்தில் மாநகராட்சி ஊழியர்கள் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சுற்றுச்சூழல் பற்றியும் மக்கும் குப்பை மக்காத குப்பைகளை பற்றியும், மேலும் காய்கறி கழிவுகளை எப்படி எல்லாம் இயற்கை உரமாக தயாரிப்பது என்பது பற்றியும், விவசாயத்திற்கு இவ்வரங்களை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதையும் விளக்கமாக மாணவ-மாணவிகளுக்கு தெரிவித்தனர்.

இந்த பேரணியில் எஸ்எஸ் சிட்டிசன் பள்ளியின் முதல்வர் கே பாஸ்கர் மற்றும் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பள்ளி  ஆசிரியர்கள் நகராட்சி ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here