நன்னிலம், மே. 31 –
செய்தி தொகுப்பு நன்னிலம் ஜி.ரவிச்சந்திரன்
திருவாரூர் பகுதிக்கு தமிழக முதல்வர் வருகை தந்த போது, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே, கோவில் திருமாளம் பஞ்சாயத்தை சேர்ந்த திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் பாலமுத்து, அவருடைய காரை சாலையின் நடுவே குறுக்கே நிறுத்தி அராஜகத்தில் ஈடுபட்டார்.
முதல்வர் வருகையை முன்னிட்டு செய்தியாளர்கள் செய்தி சேகரித்து விட்டு திரும்பி வரும் போது, நன்னிலம் அருகே, தென்குடி பகுதியில் காரை சாலையின் நடுவில் நிறுத்தி ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் திமுக பிரமுகர் பாலமுத்து, அந்த வழியே வந்த செய்தியாளர்ளின் வாகனத்தை மறித்து, தகராறு செய்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
மேலும், தொடர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டியது மட்டுமல்லாமல் வாகன ஓட்டுனரையும், செய்தியாளர்களையும் அடிக்க முயற்சித்தார். இதனால் மயிலாடுதுறை திருவாரூர் நெடுஞ்சாலையில் சற்று நேரம் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதும், பத்திரிகையாளர்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லாததால் தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் இந்நிலை தொடர்ந்தால் எதிர் வரும் காலங்களில் பத்திரிகையாளர்களின் கண்டனங்களை எதிர் கொள்ள நேரிடும் என பத்திரிகையாளர்கள் மத்தியில் எழும் பெரும்பான்மையான கருத்தாக உள்ளது. அரசு இவ்விசயத்தில் உரிய கவனம் செலுத்தி உடன் தீர்வுகாணவும் பத்திரிகையாளர்கள் சார்பில் அரசினை வலியுறுத்துகின்றனர்.






















