கும்பகோணம், மே. 29 –
கும்பகோணத்தின் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பில் மண்டல ஒருங்கிணைப்பு கூட்டம் ராயா ஓட்டலில் நடைபெற்றது. இந்த மண்டல ஒருங்கிணைப்பு கூட்டத்தில் மாவட்ட ஆளுநர் தேர்வு மற்றும் அவர்களின் சேவை மற்றும் செயல்திட்டங்கள் பற்றி உரையாடல் நடைப்பற்றது. மேலும், மண்டல தலைவர்கள் வட்டார தலைவர்கள் மண்டல பொறுப்பாளர்கள் அறிமுக நிகழ்வு நடைப்பெற்றது.
வரும் ஆண்டில் சங்கத் தலைவர், செயலர், நிர்வாக அலுவலர், பொருளாளர் ஆகியோர் பொதுமக்களுக்கு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் குறித்து மாவட்ட முதல் நிலை ஆளுநர் இமயவரம்பன் அவர்களிடம் எடுத்துரைத்துப் பேசினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட இரண்டாம் நிலை ஆளுநர் சவரி ராஜ் மாவட்ட ஆளுநர் சேது சுப்பிரமணியன் மண்டலத் தலைவர்கள் சிவராஜ் சிவகுமார் மாணிக்கம் சின்னதுரை மற்றும் லயன்ஸ் சங்கங்கள் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்



















