திருவாரூர், மே. 29 –
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ளது செருகளத்தூர் கிராமம் அக்கிரமாத்தில் பாஸ்கரன் மற்றும் அவருடைய மனைவி அலங்கார மேரி வயது 50 அவருடைய மகன் அஜய் வயது இருபத்தி நான்கு ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாஸ்கரனின் அண்ணன் மகன்களான அன்பழகன் மற்றும் செபஸ்டின் ஆகிய இருவரும் சொத்து தகராறு காரணமாக வாய்த்தகராறு ஏற்பட்டு அவ்வாக்குவாதம் முற்றிய நிலையில் பாஸ்கர் என்பவரின் அலங்கார மேரி மற்றும் அவரது மகன் அஜய் ஆகிய இருவரையும் கடப்பாரையால் குத்தி கொலை செய்து தப்பி ஓடி விட்டனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து குடவாசல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய இருவரையும் பல்வேறு இடங்களில் போலீசார் வலை வீசித்தேடி வருகின்றனர்.